நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று முதல் (நவம்பர் 8ஆம் தேதி முதல்) தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறைந்து வரும் நிலையில் மழலையர் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை திறக்க அரசு முன்வந்துள்ளது.