Categories
தேசிய செய்திகள்

“இன்று எல்.பி.ஜி… நாளை பெட்ரோல், டீசலா…?” மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி…!!!!

சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உக்ரைன் ,ரஷ்யா  இடையேயான போர் தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்நாள் போரையடுத்து  கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் வர்த்தகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் 105 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் இருந்து இன்று முதல்2,012 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை 20 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன்படி 1 கிலோ 150 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இருப்பினும் வீட்டு உபயோக சிலிண்டர் நிலையில் உயரவில்லை ஏற்கனவே பெட்ரோல் டீசல் ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. வணிக சிலிண்டரின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் உணவு விலை பலமடங்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல் காரணமாக விலை உயர்ந்த படாமல் இருந்துவந்த பெட்ரோல் டீசல் விலை தற்போது உயரும் என கூறப்படுகிறது.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் கடந்துள்ள நிலையில் மீண்டும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறுவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இன்று சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. நாளை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயரத் இதன் மூலம் சாதாரண மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கும் தங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது மோடி அரசு தெளிவு படுத்தியுள்ளது இன்று எல்பிஜி, நாளை.. பெட்ரோல், டீசலா ? என கேள்வி எழுப்பியுள்ளார்

Categories

Tech |