Categories
தேசிய செய்திகள்

இன்று (ஏப்ரல்.2) முதல் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு…..!!!!!!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா 2-வது அலையால் நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அத்துடன் பலர் கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்தது. 2-வது அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் கொரோனா நோய் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனிடையில் கொரோனா தடுப்புப் பணிகளை துரிதப்படுத்த உலகசுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.

இந்த உத்தரவின் அடிப்படையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முழு ஊரடங்கை அறிவித்தது. அதன்பின் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்து இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 2 டோஸ் செலுத்தப்பட்டு வந்தது. இப்போது 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் மத்திய அரசு மார்ச் 31ஆம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை ரத்து செய்து வருகின்றனர். பிற மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2 (இன்று) முதல் அனைத்து வகையான கொரோனா கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது முகக்கவசம் அணிதல் கட்டாயம் என்பது உட்பட அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |