தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. அதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் சென்னை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கும்,வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக செயல்படும் ஆவடி நடுக்குத்தகை நடுநிலைப் பள்ளி மற்றும் திருத்தணி பூனிமாங்காடு உயர்நிலைப் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.