75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நாமக்கல்லில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ரூ.75க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. அதாவது, வாகனத்தின் பதிவு எண்ணில் முதல் இரண்டு எண்கள் 75 அல்லது கடைசி இரண்டு எண்கள் 75 என்று இருந்தால் அந்த வாகனங்களுக்கு 75 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படுகிறது. இச்சலுகை மொத்தம் 75 நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், 75 என பதிவெண் கொண்ட வாகனங்களின் வாடிக்கையாளர்கள் இலவச பெட்ரோலை நிரப்பி செல்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Categories