தமிழகத்தில் கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஈர்த்து செய்யப்பட்டது. அறிவிக்கப்படாமல் இருந்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதேநேரம் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பொதுமுடக்கத்தால் ஏராளமானோர் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கான தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்படட்டது.
அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24 ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் ஜூலை 27-ஆம் தேதி அன்று தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது. அந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பெறுவதற்கு இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.dgt.gov.in என்ற இணையத்தில் அல்லது அவரவர் பள்ளிகளில் என்று பெற்றுக்கொள்ளலாம்.