Categories
தேசிய செய்திகள்

இன்று கடைசி நாள்….. இல்லையெனில் ரூ. 1000 அபராதம்…. உடனே போங்க….!!!

2020 21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி இன்று ஆகும். இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என்று இரண்டு முறை வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது.

அதன்படி, 2020 – 21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக் கெடு இன்றுடன் முடிவடைகிறது. இன்றைக்குள் தாக்கல் செய்ய தவறினால் ரூபாய் 5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் ரூபாய் 1000-மும்,  5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூபாய் 5000-மும் தாமத கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 2022 ஜனவரி முதல் மார்ச் 31க்குள் கணக்கு தாக்கல் செய்யலாம். இது தொடர்பான இணைய முகவரி www.incometax.gov.in என்பதாகும் .

Categories

Tech |