இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையை எட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ஜூன் மாதத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி தற்போது வரை பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை ஏறியுள்ளது. அதன்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 90 ரூபாயை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்தது ரூ.92.90 ஆகவும், டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.86.31 ஆகவும் உள்ளது. இந்த புதிய விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.