சென்னையில் மட்டும் இன்று கொரோனாவுக்கு மேலும் 25 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி கொரோனாவுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 8 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.