தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.