Categories
தேசிய செய்திகள்

இன்று காலை 11 மணிக்கு…. 84-வது மன் கி பாத் நிகழ்ச்சி…. மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி….!!!!

84-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். மன் கி பாத் என அழைக்கப்படும் அந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் பற்றி அவர் பேசி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தான் எதைப்பற்றி பேச வேண்டும் என்று நாட்டு மக்களிடம் அவர் யோசனை கேட்டு தீர்மானம் செய்வார்.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணி அளவில் நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் மோடி உரையாற்ற உள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் பற்றி பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |