Categories
தேசிய செய்திகள்

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை… முழு அடைப்பு போராட்டம்… பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 121 வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். அதனால் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதுமட்டுமன்றி தற்போது வரை போராட்ட களத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது மிகுந்த வேதனையளிக்கிறது. தற்போது வரை விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. மத்திய அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. ஆனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்கள் தவிர்த்து இதர பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால் இன்று நாடு முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |