Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று காலை 8 மணிக்கு அறிவிப்பு வெளியாகும்… கோவை மாநகராட்சி…..!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து கொரோனா தடுப்பு ஊசி மையங்களின் விவரங்களை இன்று காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மேற்படி அறிவிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 10 மணி முதல் தடுப்பூசி கான டோக்கன்கள் வழங்கப்படும்.தடுப்பூசி  டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 11 மணி முதல் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.மேலும் அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |