இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனால் நாளுக்கு நாள் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல நிறுவனங்களும் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஓலாய் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை வாங்குவோருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் தள்ளுபடியுடன் கூடுதலாக நான்காயிரம் ரூபாய் கேஷ் பேக் வழங்கப்படுகின்றது. ஓலா எஸ் ஒன் மாடலுக்கு 2000 ரூபாய் கேஷ் பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ் பேக் சலுகை இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே வழங்கப்படும். ஆனால் பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடி ஆனது டிசம்பர் 31ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.