சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பூம்புகார், செங்குன்றம், புழல், பெரம்பூர், கேகே நகர், கோயம்பேடு, திருமங்கலம் தெற்கு, திருமுல்லைவாயில், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், போரூர், அடையார் மற்றும் ஆவடி உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மின் வினியோகம் செய்யப்படும்.
Categories