Categories
மாநில செய்திகள்

இன்று காலை 9 மணி முதல்… முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக முடக்கப்பட்ட விமான சேவை இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையத்தில், இன்று காலை 9 மணி முதல் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 6 மணி முதல் டெல்லி, அந்தமான் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்தனர். தற்போது காற்று வீசுவதால் விமான போக்குவரத்தை 9 மணிக்கு தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |