தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக விருதுநகரில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை மின் வாரியத்திற்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, ராமலிங்கா பஞ்சாலை ஏ – அலகு ஆகிய பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.