Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

இன்று சதுரகிரிக்கு செல்ல அனுமதி இல்லை…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வாக தமிழகம் முழுவதுமாக கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜூலை 7ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டு  நடைமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சதுரகிரி மலையில் நேற்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை கனமழை பெய்தது. இதையடுத்து ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று ஆடி அமாவாசை வழிபட்டுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று மலையேறிய பக்தர்கள் 150 பேரும் மண்டபங்களில் தங்க வைத்து உணவு பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |