இன்று உலகம் முழுவதும் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி உலக ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாள் 1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசின் முதலில் கொண்டாடப்பட்டது. இந்த தினம் ஐநா வால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே ஆண்களுக்கு சுமைகள் அதிகம். அதைவிட பொறுப்புகள் மிகவும் அதிகம். குடும்பத்திற்கு காவலனாக இருக்கும் முக்கிய பொறுப்பு ஆண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான கடமை அதிகரிப்பதால் அவர்கள் பணி செய்யும் இடத்தில் கூட அங்கு சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
அதனால் அவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் உடல் உளைச்சல் ஏற்படுகிறது. ஆண்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற தொடர்ந்து வருவாயை தேடி ஓடிக்கொண்டு இருக்க கூடிய சூழ்நிலைகள் இருந்து வருகிறது. அதன் காரணமாக ஆண்கள் கடும் உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டியவர்கள் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள். சர்வதேச உலக ஆண்கள் தினத்தில் நாம் ஆண்களை புரிந்து கொள்வோம். அவர்கள் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்.