உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களில் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்கள் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிரேக்க நகரமான ஒலிம்பியாவில் கி.மு.776 ஆம் ஆண்டு முதல் கி.மு. 393 ஆம் ஆண்டு வரை ஜியஎஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது.
அதன்பிறகு ரோமாபுரியை சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடை செய்யப்பட்டது. இந்த போட்டியானது 1894 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நவீன வடிவம் பெற்று ஒலிம்பிக் போட்டியாக மாறியது. இதனை ஒருங்கிணைப்பாளர் பியரிடி கூபர்டின் ஆவார். இவர் தான் ஒலிம்பிக் போட்டியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இதனையடுத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு வகை விளையாட்டுகள் உள்ளது. உலகளவில் ஐ.நா.வின் சார்பில் ஜூன் 23ல் சர்வதேச ஒலிம்பிக் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.