Categories
தேசிய செய்திகள்

இன்று( ஜூன் 1) முதல் இதெல்லாம் மாற போகுது….மக்களே நோட் பண்ணி வச்சிக்கோங்க….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதன்படி ஜூன் 1-ஆம் தேதி முதல் சமையல் சிலிண்டர் விலை முதல் வங்கி சேவை வரை பணம் தொடர்பான அனைத்தும் மாற உள்ளது.

 

சிலிண்டர் விலை:

 

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி மீண்டும் சிலிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் இந்த மாதமும் விலை உயரும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

 

நகைகளுக்கு ஹால்மார்க்:

 

தங்க நகைகளுக்கு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அதாவது அனைத்து நிலைகளுக்கும் கட்டாயம் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும். அப்படித்தான் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜூன் 1-ஆம் தேதி முதல் ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 14 கேரட், 18 கேரட் மட்டும் 22 கேரட் ஆகிய மூன்று தரங்களில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

போஸ்ட் ஆபீஸ் கணக்கு:

 

தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு புதிய சேவைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இனி மற்ற வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு மின்னணு முறையில் பணம் அனுப்பவும் பெறவும் முடியும். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வாகன காப்பீடு:

ஜூன் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது 150 சிசிக்கு மேலுள்ள இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் 15 சதவீதம் உயர உள்ளது. அதனைப் போலவே 1000 cc முதல் 1500 cc வரை உள்ள கார்களுக்கு பிரீமியம் தொகை 6 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |