தமிழகத்தில் நாளை (24 ஆம் தேதி) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக நேற்றும், இன்றும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு 9 மணி வரையிலும், இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது இரண்டு நாட்களுக்கு மது கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.