Categories
மாநில செய்திகள்

இன்று (டிச…24) முதல் மதுரை – சீரடி இடையே பாரத் கௌரவ் ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிடும் விதமாக பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் சேவை கடந்த ஜூன் 14ஆம் தேதி கோவை மற்றும் சாய் நகர் சீரடி இடையே இயக்கப்பட்டது. இதன்  எட்டாவது பயணம் மதுரை மற்றும் சாய் நகர் சீரடி வரை தொடங்க உள்ளது. மதுரையில் இருந்து  டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், சென்னை, எழும்பூர், பந்தர்ப்பூர் மற்றும் வாடி வழியாக டிசம்பர் 26ஆம் தேதி காலை 7.30 மணிக்கு சீரடி சென்றடையும்.

அதன் பிறகு டிசம்பர் 27ஆம் தேதி சீரடியில் இருந்து பகல் 2.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மந்த்ராலயம் சாலை சென்னை எழும்பூர், விழுப்புரம்,விருதாச்சலம் மற்றும் திண்டுக்கல் வழியாக டிசம்பர் 29ஆம் தேதி காலை 8 மணிக்கு கூடல் நகரை சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |