உலகின் முதல் கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான ஃபைசர்/ பயோன்டெக் ஜப் என்ற கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து நாட்டின் 87 வயதான ஹரி சுக்லா என்பவருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த நாள் இங்கிலாந்து நாட்டின் தடுப்பூசி தினம் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.