ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அணைத்து மாவட்டங்களுக்கும் பரவியுள்ள கொரோனாவுக்கு பல்வேறு கிராமப்புற மக்களும் தப்பவில்ல. தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிரான சுகாதார தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. இதில் மாஸ்க் என்பதே மிக முக்கியமாக தேவையாக இருக்கிறது. அனைத்து மக்களுக்குமே முகக்கவசம் என்பது ரேஷன் கடை வாயிலாக கொடுக்கப்படும் என ஏற்கனவே உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முக கவசங்கள் கொடுக்க இருக்கிறார். அந்த அடிப்படையில் இன்று முதல் இந்தத் திட்டம் தொடங்க இருக்கின்றது.