தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றதை பூஜா ஹெக்டே டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் . மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இன்று தளபதி 65 படத்தின் பூஜை சென்னையில் உள்ள சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்றதாக தகவல்கள் பரவி வருகிறது.
Missing out on the muharat puja today of #Thalapathy65 since I’m shooting elsewhere. But my heart and spirit is with the team. Good luck ❤️ can’t wait to join you’ll soon 💃🏻💃🏻💃🏻
— Pooja Hegde (@hegdepooja) March 31, 2021
இதனை உறுதி செய்யும் விதமாக நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘வேறொரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் காரணமாக தளபதி 65 பூஜையில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை . இருப்பினும் தளபதி 65 படக்குழுவினர்களுக்கு எனது இதய பூர்வ வாழ்த்துக்கள். விரைவில் இந்த படக்குழுவுடன் இணையக் காத்திருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இன்று தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.