Categories
மாநில செய்திகள்

இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில்…. சிறப்பான 10 முக்கிய அறிவிப்புகள்….!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் நிதித்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

இதில் 10 முக்கியமான அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

1. தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு குறைக்கப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

2. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற 2756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

3. பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்காரச் சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்

4. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தூத்துக்குடி விழுப்புரம், வேலூர் மற்றும் திருப்பூர் என 4 இடங்களில் டைடல் பார்க் அமைக்கப்படும். இதே போல தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம்,நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும்.

5. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் சேவைக்கான நடவடிக்கை.

6. குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை

7. அரசு ஊழியர்களின் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு

8. வில்லங்க சான்றிதழ்களை இனி 1950 முதல் இணையதளத்திலேயே பார்வையிடலாம்.

9. தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் 1 ஜிபிபிஎஸ் வேக திறன்கொண்ட இணைய வசதி ஏற்படுத்தப்படும்

10. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு; தினசரி ஊதியம் 300 ரூபாயாக உயர்வு

Categories

Tech |