Categories
தேனி மாவட்ட செய்திகள்

 ‘இன்று தான் கடைசி நாள்’… மரத்தில் தொங்கிய மர்ம பார்சல்… தேனியில் பரபரப்பு…!!!

தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னர் உள்ள மரத்தில் தொங்கிய மர்ம பார்சல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கின்ற ஒரு மரத்தில் நேற்று ஒரு மர்ம பார்சல் தொங்கிக்கொண்டிருந்தது. அந்த பார்சல் இனிமேல் இன்று கடைசி நாள் என்று ஒரு வாசகம் எழுதப்பட்டு இருந்தது. அதற்கு அருகில் நவம்பர் 11 என்ற நேற்றைய தேதி எழுதப்பட்டு நட்சத்திரங்கள் வரையப்பட்டு இருந்தன. அதனை கண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மர்ம பார்சல் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பொது மக்கள் பயத்துடன் எடுத்துச் சென்றார்கள்.

அந்த பார்சலில் எழுதப்பட்ட வாசகம் மற்றும் மது கட்டி வைக்கப்பட்ட விதம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த மர்ம பார் சலே அகற்றி திறந்து பார்த்தபோது அதற்குள் வெறும் அட்டை மட்டுமே இருந்தது. அதன்பிறகு பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் நேற்று காலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனநலம் பாதித்த நபரொருவர் சுற்றித் திரிந்ததும், அவர் மரத்தில் அந்த பார்சலை கட்டி வைத்ததும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |