உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான “நெஞ்சுக்கு நீதி” என்ற திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில் இந்த திரைப்படத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இன்று பார்த்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் முதல்வர் ஸ்டாலின் இந்த திரைப்படத்தை பார்த்தார்.
படத்தை பார்த்த பிறகு, படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண் ராஜா காமராஜ்,தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை ஸ்டாலின் தெரிவித்தார். அதன்பின் படத்தைப் பார்த்த ஸ்டாலின், படம் நன்றாக உள்ளது என பாராட்டினார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது.