Categories
மாநில செய்திகள்

இன்று தீபத்திருநாள்…. வீட்டில் இந்த தீபம் ஏற்றுங்கள்…. பல நன்மைகள் கிடைக்கும்…!!

திருக்கார்த்திகையன்று நெல்லிக்காயில் தீபம் ஏற்றுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

நம் வீடுகளில் தினமும் விளக்கேற்றுவதன் மூலம்தெய்வ சக்தி அதிகரிக்கும். திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளன. ஆகவே தீபம் ஏற்றினால் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம் என்பது ஐதீகம். வீட்டில் தீபம் ஏற்றுவது மகாலட்சுமியை அழைப்பதின்  வெளிப்பாடு.

வீட்டிலிருக்கும் இருளான எதிர்மறை எண்ணங்களை அக்கினியின் வெளிச்சம் கொண்டு போக்குவதற்காக தான் விளக்கு நாம் அன்றாடம் காலை மாலை ஏற்றவேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் கெட்டவை மறைந்து நல்லவை நடக்கும். திருக்கார்த்திகை போன்ற விசேஷ நாட்களில் எலுமிச்சை விளக்கு, அகல், மாவு தீபம் கூட ஏற்றலாம்.

அதுபோலவே திருக்கார்த்திகையன்று நெல்லிக்காய் விளக்கு ஏற்றுவதும் நன்மை என சொல்லப்படுகிறது. நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் நம் துன்பங்கள் மறைந்து இழந்தவை  மீண்டும் வரலாம். வீட்டில் விளக்கு ஏற்றுவது செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துகிறது. காலை மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றலாம். விளக்கு ஏற்றுவதால் அங்கு இறை சக்தி கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதிலும் பெரிய நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவது அவ்வளவு நல்லதாம்.

நெல்லிக்காய் விளக்கு ஏற்றும் முறை:

1.காட்டு நெல்லிக்கனியை விளக்கேற்ற பயன்படுத்தினால் நல்லது. ஏனென்றால் பெரியதாக இருப்பதால் தீபம் ஏற்ற சரியாக இருக்கும்.

2.கொஞ்சம் பெரியதாக்க வாங்கி என்னை திரி வைக்கும் அளவிற்கு மேற்புறமாக சற்று பல்லும் தோண்டி கொள்ளுங்கள்.

3.அதே போல் அதன் அடிப்பகுதியில் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விடுங்கள்.

4.பின்னர் பஞ்சு திரியை நெய்யில் நனைத்து அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கு ஏற்றுங்கள்.

5.கார்த்திகை தீபத்திருநாளில் இதுபோல விளக்கு ஏற்றினால் இழந்ததை மீட்டு மீண்டும் பெற முடியும் என்பது ஐதீகம். சொத்து பொருட்களை நஷ்டத்தில் இழந்திருந்தால் அவற்றைமீட்டு மீண்டும் வாழ்வில் முன்னேற்றம் பெறலாம்.

Categories

Tech |