Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று நடக்காது, யாரும் போகாதீங்க…. மக்களுக்கு அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஊசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படாமல் உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள். இதையடுத்து கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகஇன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்த படாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி வந்ததும் விரைவில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |