சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான மிக்கைல் கோர்ப்பசேவ் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த 30ஆம் தேதி தனது 91 வது வயதில் காலமானார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இந்நிலையில் அவரது மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மிக்கைல் இறுதி சடங்கு இன்று மாஸ்கோவில் அரசு மரியாதையுடன் நடைபெறுகின்றது. இருப்பினும் இதில் அதிபர் புதன் கலந்து கொள்ள மாட்டார் என அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
மேலும் தனது சீர்திருத்த நடவடிக்கைகள் மூலமாக வலிமை வாய்ந்த சோவியத் ஒன்றியம் சிதறியதற்கு மிக்கைல் கோர்ப்பசேவ் காரணமாக இருந்ததாக ரஷ்யாவில் விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதன் காரணமாகவே அவரது இறுதிச் சடங்கை புதின் தவிர்ப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது. எனினும் மிக்கைல் கோர்பசேவ் உடல் வைக்கப்பட்டு இருக்கின்ற மருத்துவமனைக்கு புதின் நேற்று முன்தினம் சென்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.