Categories
உலக செய்திகள்

இன்று நடைபெற்ற ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு…. கலந்து கொண்ட இந்திய ஜனாதிபதி….!!!

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் நமது நாட்டின்  ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் உடல்நிலை குறைவு காரணமாக தனது 96-வது வயதில் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் உடல் விமான மூலம் கடந்த 13-ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. அங்கு ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில்  ராணியின் உடலை கார் மூலம் பங்கிங்ஹாம்   அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது . இந்த இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.

இதனையடுத்து இன்று ராணியின் உடல் கடந்த ஆண்டு இறந்த ராணியின் கணவர்  அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே   நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக நமது இந்திய நாட்டின் சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விமான மூலம் லண்டன் சென்றுள்ளார். இதனையடுத்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.

Categories

Tech |