Categories
தேசிய செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசு தினமான இன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்கள் விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறார்கள். அதனால் அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் தடியடி தாக்குதல் நடத்தியதால் கலவரம் வெடித்து பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போலீஸார் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் 144 தடை உத்தரவு சிறப்பிக்க படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால், இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |