Categories
உலக செய்திகள்

இன்று நாட்டிற்கு சோகமான நாள்…. ஏன் தெரியுமா?…. ஜோ பைடன் நெகிழ வைக்கும் பேச்சு….!!!

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டப்பூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் கருகலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை, தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறி உள்ளது.

இது குறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியது, “இது என்னை திகைக்க வைக்கிறது. இந்த முடிவால் ஏழைப் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இது எனது பார்வையில் நாட்டிற்கு ஒரு சோகமான நாள். ஆனால் சண்டை முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |