காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜீன் கார்கே பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 23 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. இந்நிலையில் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜீன் கார்கே பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனியா காந்தி கூறியதாவது. புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜீன் கார்கேவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன.
ஏனென்றால் உங்களின் அன்பையும், நீங்கள் எனக்கு அளித்த மரியாதையும் நான் என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை மதிப்பேன். ஆனால் அந்த மரியாதை மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்தது. ஏனென்றால் முடிந்த அளவுக்கு எனது பணியை நான் சிறப்பாக செய்தேன். மேலும் என் தோல்களின் மேல் ஒரு சுமை இருந்தது. அந்த பொறுப்புகளில் இருந்து இன்று நான் விடுபடுகிறேன். இதனால் இயல்பாகவே நான் நிம்மதியாக உணர்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது மிகப்பெரிய பொறுப்பு. இனி அந்த பொறுப்பு புதிய தலைவருடையது. ஏனென்றால் நமது காங்கிரஸ் கட்சி இதுவரை பல சவால்களை சந்தித்துள்ளது. அந்த சவால்களை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம். முழு பலத்துடன் ஒற்றுமையாக நாம் முன்னேறி வெற்றி பெற்றோம் என அவர் கூறியுள்ளார்.