தலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டான இதில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை, மக்களை நேரடியாக பாதிக்காத வகையிலான வரி சீரமைப்பு, சமூக நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, மாதந்தோறும் மின் கட்டணம் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் எம்எல்ஏக்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது.
இந்நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாய் இழப்பை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கான அறிவிப்பு பட்சத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் பட்ஜெட்டில் வரி உயர்வு, கட்டண உயர்வு இருக்காது என எதிர்பார்க்கலாம்.