இந்தியா நியூசிலாந்துக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு மான்சிங் இன்டோர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறிய இந்திய அணி புதிய பயிற்சியாளர் ராகுல் ராபர்ட் தலைமையில் நியூசிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25 ஆம் நாளும் 2 -வது டெஸ்ட் டிசம்பர் 3-ஆம் நாளும் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடர் முடிந்த 3-வது நாளில் நியூசிலாந்து அணி இந்திய தொடரில் பங்கேற்க இருப்பதால் கேப்டன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் நியூசிலாந்து அணியின் கேப்டனாக டிம் சவுதின் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 20ஓவர் உலக கோப்பை போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோற்ற இந்த அதற்க்கு இன்று பழிதீர்க்க காத்துகொண்டு இருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.