Categories
மாநில செய்திகள்

இன்று பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இன்று 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

இதனால் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அரசு பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக 2022 ஜனவரி 8ஆம் தேதி வேலை நாட்களாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |