சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், ‘சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று 10-ந்தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 3-ந்தேதி(சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.