தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ( பிப்.19 ) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பஞ்சாயத்து சட்டப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை என அனைத்து நிறுவனங்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.