ஒவ்வொரு ஆண்டும் மகாராணியின் பிறந்த நாள் இருமுறை கொண்டாடப்படுவது ஏன்? என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது
பிரிட்டன் மகாராணியார் எலிசபெத் இன்று தனது 95வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மகாராணியார் 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி தான் பிறந்தார். ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இரண்டாம் சனிக்கிழமையும் அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் ஏன் தெரியுமா?ஏனெனில் மன்னர் இரண்டாம் ஜார்ஜ் நவம்பர் மாதம் பிறந்தவர். ஆனால் நவம்பர் மாதம் கடும் குளிர் என்பதால் அரண்மனை முன்பு கொண்டாடப்படும் தனது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் மக்கள் குளிரால் சிரமத்திற்கு ஆளாவார்கள்.
எனவே ஜூன் மாதம் தனது பிறந்த நாள் கொண்டாடப்படும் என்றும் அன்று ராணுவ அணிவகுப்பு நடைபெறும் எனவும் அன்று தான் தனது அதிகாரப்பூர்வ பிறந்தநாள் என அறிவித்தார். எனவே ஆட்சி செய்பவர்கள் இரண்டு பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. அதே போல் ஏப்ரல் மாதம் கடுமையான வெயில் என்பதால் மகாராணியார் பிறந்தநாள் ஜூன் மாதமும் கொண்டாடப்பட்டு வருகிறது.