தமிழக அரசு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி வைகை அணையில் இருந்து செப்டம்பர் 7 முதல் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன்முலம் பெரியார் பாசன பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்நிலையில் வைகை அணையில் இருந்து 120 நாளுக்கு மொத்தம் 8,460 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் நீர் பாசன வசதி பெறும் என்று நீர்வளத்துறை அறிவித்துள்ளது.