Categories
உலக செய்திகள்

இன்று பூமியை வீரியம் மிக்க சூரிய புயல் தாக்கும்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!!

பூமியை இன்று வீரியம் மிக்க சூரிய புயல் தாக்க வாய்ப்புள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் பாம்பு வடிவத்தில் நெளிந்த நிலையில், பூமியை நேரடியாக தாக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர் தமிதா ஸ்கோவ் என்ற இயற்பியலாளர் கணித்துள்ளார்.

சூரிய புயல் தாக்கினால் தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. செயற்கை கோள் மற்றும் தொலைபேசி இடையேயான ஜிபிஎஸ் எனப்படும் ரேடியோ அலைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் ஜிபிஎஸ் சேவை பாதிக்கப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |