Categories
மாநில செய்திகள்

இன்று போகி பண்டிகை: மக்களுக்கு அரசு எச்சரிக்கை அறிவிப்பு….. மீறினால் ரூ.1000 அபராதம்….!!!!

தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாளன்று பொங்கல் பண்டிகையானது மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நாளில் விவசாயத்திற்கு உதவிபுரியும் சூரிய பகவானை வழிபட்டு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுவார்கள். மேலும் மாட்டு பொங்கல் தினத்தன்று விவசாயத்திற்கு உதவும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி அதன் கழுத்தை சுற்றி மாலையிட்டு அலங்காரம் செய்வார்கள். அதுமட்டுமல்லாமல் சிறப்பு பூஜைகள் செய்து கடவுளுக்கு உணவு படைத்த பின் மாடுகளுக்கு வழங்கப்படும்.

இதையடுத்து காணும் பொங்கல் தினத்தில் உற்றார் உறவினர்களை சந்தித்தல், நண்பர்களை சந்தித்தல் மற்றும் பெரியவர்களிடம் ஆசிகளை பெறுதல் ஆகியவை நடைபெறும். மேலும் போகி பண்டிகை தினம் மார்கழி மாதத்தின் இறுதி நாளாகும். அன்றைய தினம் பழையன கழிந்து புதியன புகுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டிலுள்ள பழைய அல்லது தேவையில்லாத பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள். அதன்படி இன்று தமிழகத்தில் போகி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் அல்லது டயர் ஆகிய பொருட்களை எரிக்க தடை என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த விதிகளை மீறி பிளாஸ்டிக் அல்லது டயர் போன்ற பொருட்களை எரிப்பவர்களுக்கு 1,000ரூ  அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதை அனைத்து மண்டலங்களிலும் உள்ள அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.

Categories

Tech |