சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 19பேர் கொரோனாவுக்கு பலியானதால் தகவல் வெளியாகியுள்ளது:
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது.
கொரோனாவுக்கு பாரபட்சமில்லாமல் இளம் வயதினர் பலரும் மரணிப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.