தமிழகத்தில் இன்று மட்டும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் 68,254 பேர் கொரோனா பாதிப்பில் சிக்கி இருக்கின்றார்கள்.தற்போது வரை 24,890 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இன்று மட்டும் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 73 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 49 அரசு, 46 தனியார் பரிசோதனை மையம் என மொத்தமாக 95 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. இன்று மட்டும் 34,102 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12,83,419 பேருக்கு மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 56.48 % பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
அரியலூர் 2
செங்கல்பட்டு 274
சென்னை 1713
கோயம்புத்தூர் 23
கடலூர் 39
தர்மபுரி 9
திண்டுக்கல் 74
ஈரோடு 26
கள்ளக்குறிச்சி 83
காஞ்சிபுரம் 152
கன்னியாகுமரி 8,
கரூர் 10,
கிருஷ்ணகிரி 9
மதுரை 308
நாகப்பட்டினம் 6,
நாமக்கல் 4,
நீலகிரி 1,
பெரம்பலூர் 1
புதுக்கோட்டை 56
ராமநாதபுரம் 93
ராணிப்பேட்டை 67
சேலம் 50
சிவகங்கை 88
தென்காசி 40
தஞ்சாவூர் 16
தேனி 24
திருவள்ளூர் 209
திருவண்ணாமலை 141
திருவாரூர் 15
தூத்துக்குடி 41
திருநெல்வேலி 48
திருப்பத்தூர் 6,
திருச்சி 86
வேலூர் 179
விழுப்புரம் 109
விருதுநகர் 113