வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே கடக்கும்.பிறகு மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவு கூடும். இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories