Categories
மாநில செய்திகள்

“2020 – ன் கடைசி சந்திரகிரகணம்” இன்று மதியம் நிகழ்கிறது…!!

இந்த வருடத்தில் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் நிகழ போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருடந்தோறும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் வருவது இயல்பான ஒன்று தான். தற்போது 2020 ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி சந்திரகிரகணம், இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கு முடிவடைய உள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும்.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது நிகழ்கிறது. பூமியின் நிழல் சந்திரன் மேற்பரப்பில் விழும் போது பெனும்பிரல் என்னும் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

Categories

Tech |