Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 1 மணி முதல்… கோவை மக்களுக்கு வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக ஒரு வார இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கோவையில் இன்று மதியம் ஒரு மணி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி மையங்களுக்கு காலையில் வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் கோவை மாநகர பகுதிகளில் 31 மையங்களிலும், புறநகர் பகுதிகளில் 46 மையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |